+2 பொதுத்தேர்வை எழுத காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் Kovai Foundation மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதை பொதுத்தேர்வுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது மிகவும் எளிதானதே. இருப்பினும் தேர்வு என்பது இன்றும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாம் எந்த படிப்பை நோக்கி பயணிக்கப்போகிறோம் என்பதை காட்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வோ உயர்கல்வியை மட்டுமல்ல அடுத்து என்னவாகப்போகிறோம் என்பதையும் சேர்த்தே காட்டும்.
தேர்வு மட்டும் அல்ல வாழ்வில் எந்தவொரு செயலிலும் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிகப்படியான ஆர்வமும், நண்பர்களுடன் போட்டியிடும் எண்ணமும் இருக்க வேண்டும்.
படிக்கும் போதும் முழுமையான கவனத்துடன் படிக்க வேண்டும், படிக்கும் பாடத்தினை கடினமான பாடம் என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது. கடினமான பாடம் என்று எதுவும் இல்லை. நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் முழுமதிப்பெண்ணான 100 மதிப்பெண்னை எடுக்கின்றனர் என்பதை கவனத்தை கொள்ளுங்கள். விரும்பி படித்தால் எந்த பாடமும் கடினமில்லை.
தேர்வு எழுதுவதை எளிதாக்கும் வழிகள்:-
பொதுத்தேர்வில் வழங்கும் தேர்வுத்தாளை T20 கிரிக்கெட்-ல் விளையாடுவது போன்று எடுத்தவுடனே அடித்து ஆடவேண்டும் என்று நினைப்பது உங்களது சிந்தனையை சிதைக்கக்கூடும்.
எனவே, முதலில் கேள்விகளை நேரம் எடுத்து நன்கு படியுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பதில்களின் அடிப்படையில் அந்த கேள்விகளுக்கு விடையளிக்க கேள்விகளை வரிசைப்படுத்தி குறித்துக்கொள்ளுங்கள். பின் வரிசைப்படுத்தப்பட்ட கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக பதில் எழுத தயாராகுங்கள்.
விடைகளின் தலைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அவற்றை வேறு வண்ண பேனாக்களில் எழுதுவது நன்று.
அதற்காகச் சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட பேனாக்களில் எழுதிவிடாதீர்கள்.
தலைப்புகளுக்கு அடிக்கோடிடுவது அவசியம். ஆனால் இதை உடனுக்குடன் செய்து நேரத்தை வீணடிக்காமல் கடைசியில் மொத்தமாக செய்வது புத்திசாலித்தனம்.
இறுதி 15 நிமிடங்களில் எதையும் எழுத வேண்டாம். விடைத்தாளின் பக்கங்களுக்கு பக்கஎண் இடுவது. தலைப்புகளுக்கு அடிக்கோடு இடுவது, எல்லாப் பக்கங்களிலும் சுற்றுக்கோடு இடுவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்துங்கள். முக்கியமாக கோடுகள் அனைத்தையும் ஒரே வண்ணத்தில் இடுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒரு உள்ளது. அது என்னவென்றால் நம் மனநிலை மட்டும் தான். மனநிலையினை திடமாக வைத்திருக்க வேண்டும்.
தேர்வில் வெற்றிபெறுவோமா! தோல்வியடைவோமா! 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியுமா? கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண்களை (Cut Off) பெற முடியுமா? என்பது போன்ற சிந்தனைகளுக்கு துளியும் இடம் தரக் கூடாது.
பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தை இது போன்ற சிந்தனைகள் சிதைத்துவிடும். கவலையை உருவாக்கி நம் திறனை குறைத்தவிடும் தேர்வு முடிவைப்பற்றி சிந்திக்கவே கூடாது.
உங்களது முழுத்திறனையும் தேர்வுக்கு தயாராவதற்கு மட்டுமே செலவளிக்க வேண்டும். முழு சிந்தனையும் தேர்வை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். வெற்றியோ! தோல்வியோ! முடிவு எதுவாக இருத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற மன உறுதியுடன் காலத்தை எதிர்கொண்டால் வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.

